நேர்மையானவர், பெரும் உழைப்பாளி, கொடை வள்ளல்: வசந்தகுமார் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி எச்.வசந்தகுமார் நேற்று மாலை காலமானார்.

வசந்தகுமாரின் திடீர் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவற்றின் தொகுப்பு:

குஷ்பு: கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் மறைந்துவிட்டார். மிகவும் வருத்தமாக உள்ளது. விசுவாசமிக்க காங்கிரஸ்காரரும், கடின உழைப்பாளியுமான ஒரு மனிதரை நாம் இழந்துவிட்டோம். கரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை தன்னை மதிக்கும் மக்களுக்கு அவர் தொடர்ந்து சேவை செய்தார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ஆழ்ந்த இரங்கல்கள்.

நாங்கள் எப்போதும் உங்களைப் புன்னகை மன்னன் என்றே அழைப்போம். உங்கள் இதமான புன்னகையும், பிரச்சினைகளை எளிமையாக அணுகும் முறையும், நெஞ்சில் பெருமையுடன் காங்கிரஸ் கொடியை அணிந்திருப்பீர்கள். உங்கள் கடின உழைப்பு, மற்றும் ஏழைகளுக்கு உதவும் குணத்தில் எப்போதும் நீங்கள் வெட்கப்பட்டதில்லை. அனைத்தும் மிஸ் செய்யப்படும்.

மோகன் ராஜா: எப்போதும் இந்த அற்புதமான மனிதரின் மீது மரியாதை வைத்திருந்தேன். 'வேலைக்காரன்' படப்பிடிப்பு முழுக்க தம்பி விஜய் வசந்த் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அந்தச் சகோதரர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

சிவகார்த்திகேயன்: வசந்தகுமார் அய்யாவின் மறைவுச் செய்தி கேட்டுத் துக்கமடைந்தேன். நண்பர் விஜய் வசந்த் மற்றும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்: மிகவும் வருத்தமாக உள்ளது. ஆன்மா சாந்தி அடையட்டும் என்று நமக்கு நாமே எப்படி சொல்லிக் கொள்வது. உங்களை மிஸ் செய்வோம் வசந்தகுமார் அங்கிள்.

வெங்கட் பிரபு: இந்தச் செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரர்களே.

ஆதி: வசந்தகுமாரின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். விஜய் வசந்த் மற்றும் வினோத் ஆகியாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராதாரவி: அண்ணன் வசந்தகுமார் எம்.பி. காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்துவிட்டவர் வசந்தகுமார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவுபடுத்தும். அந்த அளவுக்கு தமிழகத்தில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார். மேலும், அவர் எனக்குத் தயாரிப்பாளரும் கூட. அவர் தயாரித்த படத்தில் நான் நடித்துள்ளேன்.

தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்தகுமார். எப்போது சென்றாலும் சிரித்த முகத்துடன் வரவேற்பவர். அவர் முகத்தில் சிரிப்பு இல்லாமல் நான் பார்த்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு புன்னகையுடனே இருந்தவர். இப்போது அந்தச் சிரிப்பு இல்லாத முகத்தை நான் எப்படிக் காண்பேன். பணிவானவர், நேர்மையானவர், தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர் என வசந்தகுமாரைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். அவரது இழந்து வாடும் அவருடைய அண்ணன் குமரி அனந்தன், அண்ணன் மகளும் தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், மகன்கள் விஜய் வசந்த், வினோத், மகள் தங்க மலர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வசந்த் அண்ட் கோ ஊழியர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

சேரன்: வசந்தகுமார் அய்யாவின் ஆத்மா அமைதி கொள்ளட்டும். வாழும்போது உழைப்பின் உதாரணமாக வாழ்ந்தவர். ஏழை எளிய மக்களுக்கான வியாபாரமாய் இருந்ததால் தமிழகம் முழுவதும் கிளை பரப்பியவர். பிரார்த்திப்போம்.

பிரபு: எங்க அண்ணாச்சி வசந்தகுமாரின் மறைவு பெரும் பேரிழப்பாக நினைக்கிறேன். அனைவரிடமும் ரொம்ப பாசமாகப் பழகக் கூடியவர். காமராஜர் மீது மிகுந்த மரியாதைக் கொண்டவர். எங்கப்பா சிவாஜி மீது மிகுந்த பாசம் கொண்டவர். நேர்மையானவர், பெரும் உழைப்பாளி, கொடை வள்ளல் இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

அண்ணாச்சி ரொம்ப நல்ல மனிதர். நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்காகக் குரல் கொடுக்க அவர் தயங்கியதே இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்காக எவ்வளவோ பாடுபட்டவர். எங்கள் குடும்பத்தினர், நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுவோம். அவருடைய ஆத்மா சாந்தியடைய அப்பாவையும், இறைவனையும் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்