ஹாலிவுட் ஆல்பம் தயாரித்துள்ள ஜி.வி.பிரகாஷ்

By செய்திப்பிரிவு

முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக ஹாலிவுட்டில் ஆல்பமொன்றைத் தயாரித்துள்ளார்.

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இவருடைய இசையமைப்பில் பல்வேறு படங்கள் ஹிட்டடித்துள்ளன. சமீபத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'அசுரன்' படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான். அதே போல் 'சூரரைப் போற்று' படத்தின் இசையமைப்பாளரும் ஜி.வி.பிரகாஷ்தான்.

தற்போது ஹாலிவுட்டில் ஆல்பமொன்றைத் தயாரித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். 'கோட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.

இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். 'ஹை அண்ட் ட்ரை' ஜி.வி.பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேன்ஜ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜி.வி. செய்துள்ளார்.

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்வுகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடல் ஜி.வி.பிரகாஷின் சொந்த ஸ்டுடியோவில், யெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் 'அடெல்', 'டெய்லர் ஸ்விஃப்ட்', 'கேடி பெர்ரி', 'மரூன் 5' உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

'கோல்ட் நைட்ஸ்' ஆல்பத்தின் முதல் பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்