'கிங்ஸ் மேன்' திரைப்பட வெளியீட்டை ஒத்திவைத்த டிஸ்னி

By ஏஎன்ஐ

டிஸ்னி நிறுவனம் தயாரித்திருக்கும் 'தி கிங்ஸ் மேன்' திரைப்படத்தின் வெளியீடு அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு 'கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்' திரைப்படம் வெளியானது. 2017-ம் ஆண்டு இதன் தொடர்ச்சியான 'கிங்ஸ்மேன்: தி கோல்டன் சர்க்கிள்' திரைப்படம் வெளியானது. இதே பெயரைக் கொண்ட காமிக்ஸின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் படங்களின் அடுத்த பாகம் செப்டம்பர் 18, 2020 அன்று வெளியாகவிருந்தது.

தற்போது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீடு ஒத்திப்போவது இது முதல் முறை அல்ல.

மாத்தியூ வான் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் முதல் இரண்டு திரைப்படங்களுமே பெரிய வெற்றி பெற்றவை. முதலில் 20-த் சென்ச்சுரீ ஃபாக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும், அந்நிறுவனத்தை டிஸ்னி வாங்கிவிட்டதால் தற்போது டிஸ்னியின் தயாரிப்பாக வெளிவருகிறது.

அடுத்த பாகம் 1990-களில் நடக்கும் முன் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரால்ஃப் ஃபையன்ஸ், கெம்மா அர்டெர்டன், ஜிமோன் ஹோன்ஸோ ஆகியோர் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்