இணையத்தில் நடந்த டிசி ரசிகர்களுக்கான நிகழ்ச்சி: 2.2 கோடி பார்வைகளை ஈர்த்தது

இணையத்தில் நடந்த டிசி ஃபேன் டோம் நிகழ்ச்சி சர்வதேச அளவில் 2.2 கோடி பார்வைகளை ஈர்த்துள்ளது.

டிசி காமிக்ஸின் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்புகள், முன்னோட்டங்கள் இணையம் வழியாக நடந்த டிசி ஃபேன்டோம் என்ற பொது நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமை அன்று ரசிகர்களுடன் பகிரப்பட்டது. கிட்டத்தட்ட 24 மணி நேரம் நடந்த இந்த நிகழ்வு, உலகம் முழுவதிலுமிருந்து இதுவரை 2.2 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

இப்படி நீண்ட நேரம் நடக்கக்கூடிய நிகழ்ச்சியை ரசிகர்கள் இணையத்தில் பார்ப்பார்களா என்பதற்கான பரிசோதனை முயற்சியே இது. தற்போது மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 'வொண்டர் வுமன் 1984', 'தி பேட்மேன்', 'ஜஸ்டிஸ் லீக் - ஸ்னைடர் கட்' உள்ளிட்ட பல படைப்புகளின் ட்ரெய்லர், டீஸர்கள் வெளியிடப்பட்டன. மேலும் டிசி காமிக்ஸை அடிப்படையாகக் கொண்ட தொலைக்காட்சித் தொடர்கள், வெப் சீரிஸ் மற்றும் வீடியோ கேம்கள் குறித்த அறிவிப்புகளும் இடம் பெற்றன.

கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்ததோடு கிட்டத்தட்ட 52 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ட்ரெண்டிங்கில் இருந்தது. யூடியூபில் மட்டும் 82 நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

இந்த நிகழ்ச்சி குறித்துப் பேசியிருக்கும் வார்னர் பிரதர்ஸ் தொலைக்காட்சி குழுமத் தலைவர் லிஸா க்ரெகோரியன், "ரசிகர்களுக்குத் தேவையை விட அதிகமாக, மிகச் சிறப்பாகத் திருப்தியளிக்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று நாங்கள் மிகவும் விரும்பினோம்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE