புதிய பட அறிவிப்பு: சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளான அர்ஜுன் கபூர்

By ஐஏஎன்எஸ்

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர். 2012 ஆம் ஆண்டு ‘இஷாக்ஸாதே’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘2 ஸ்டேட்ஸ்’, ‘கி அண்ட் கா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காஷ்வீ நாயர் இயக்கும் தலைப்பிடப்படாத ஒரு படத்தில் அர்ஜுன் கபூர் நடித்து வருகிறார். அவரோடு ரகுல் ப்ரீத் சிங், ஜான் ஆபிரகாம், அதிதி ராவ் ஹைதரி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிகழும் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்தது. வாரிசு நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரின் சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் அவர்களை நேரடியாகச் சாடி வருகின்றனர். இதனால் சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது.

வாரிசு அரசியல் சர்ச்சையிலிருந்து அர்ஜுன் கபூரும் தப்பவில்லை. அர்ஜுன் கபூர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு நேற்று (26.08.20) வெளியான சில மணி நேரங்களில், அவரைக் கிண்டலடித்து பதிவுகளும், மீம்களும் ட்விட்டரை ஆக்கிரமித்தன. அர்ஜுன் கபூர் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

அந்த ஹேஷ்டேகுகளில் பயனர் ஒருவர், ''இவ்வளவு நடந்த பிறகும் அர்ஜுன் கபூரை வைத்து ஒருவர் படமெடுக்கிறார் என்றால் ஒன்று அவர் முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது தன்னம்பிக்கை நிறைந்தவராக இருக்கவேண்டும். எப்படி இருந்தாலும் இந்தப் படமும் அவரது முந்தைய படங்களைப் போலவே பெரும் தோல்வியைச் சந்திக்கும். இதுபோன்ற வாரிசு நடிகர்களின் படைப்புகளைப் புறக்கணிப்போம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘பானிபட்’ திரைப்படத்தில் அர்ஜுன் கபூரின் நடிப்பு, சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்