தமன்னாவின் பெற்றோருக்குக் கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

தன் பெற்றோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தல் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் சில மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டாலும், இதர மாநிலங்களில் கரோனா அச்சுறுத்தல் குறையவில்லை.

சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், இயக்குநர் ராஜமெளலி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர்

இந்நிலையில், தற்போது தனது பெற்றோருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமன்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமன்னா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"கடந்த வார இறுதியில் என் பெற்றோருக்கு லேசான கோவிட்-19 அறிகுறிகள் இருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருக்கும் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டோம். முடிவுகள் வந்துவிட்டன. துரதிர்ஷ்டவசமாக பெற்றோருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை விதிமுறைகளை நாங்கள் பின்பற்றியுள்ளோம். குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கடவுளின் கருணையால் பெற்றோர் தேறி வருகின்றனர். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும், ஆசீர்வாதமும் அவர்களைக் குணமடையச் செய்யும்".

இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE