ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிக்கும் படத்தில் பாடிய அமிதாப் பச்சன்

By ஐஏஎன்எஸ்

ஏ.ஆர். ரஹ்மான் தயாரிக்கும் படத்தில் அமிதாப் பச்சன் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

ஷவ்மி சிவ்ஹரே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்திப் படம் ‘அத்கன் சத்கன்’. இப்படத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ளார். இசையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் இளம் பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ‘டிரம்ஸ்’ சிவமணி இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து சிவமணி கூறியுள்ளதாவது:

''இப்படத்தில் இசை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இப்படத்தின் கதை ரசிகர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கக் கூடியதாக இருக்கும். நான்கு சிறுவர்களுக்கு இடையிலான நட்பையும், அவர்கள் தங்கள் கனவை அடைவதற்கான லட்சியத்தையும் இப்படம் பேசுகிறது. நம்பிக்கையும், லட்சியமுமே ‘அத்கன் சத்கன்’ படத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள். ஜீ5 தளத்தில் உலகம் முழுவதும் இப்படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது''.

இவ்வாறு சிவமணி கூறியுள்ளார்.

‘அத்கன் சத்கன்’ படத்தில் சோனு நிகம், ஹரிஹரன் ஆகியோருடன் நடிகர் அமிதாப் பச்சனும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்