பாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழ்பவர் சைஃப் அலிகான். நடிகை ஷர்மிளா தாகூரின் மகனான சைஃப் அலிகான் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘பரம்பரா’ படத்தின் மூலம் பாலிவுட் உலகில் நுழைந்தார். 2004 ஆம் ஆண்டு வெளியான ‘ஹம் தும்’ படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘ஜவானே ஜானே மன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கடந்த சில மாதங்களாக தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியத் தருணங்களை சைஃப் அலிகான் புத்தகமாக எழுதிவந்தார்.
இந்நிலையில் தான் எழுதும் சுயசரிதை புத்தகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக சைஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''நம் வாழ்வில் நடந்த முக்கிய விஷயங்களை நாம் பதிவு செய்யவில்லையென்றால் அவை காலத்தால் தொலைந்து போய்விடும். அவற்றைத் திரும்பிப் பார்ப்பதும், நினைவுகூர்வதும், பதிவு செய்வதும் நல்ல விஷயங்கள். அது வேடிக்கையானதும் கூட. இது ஒரு சுயநல நடவடிக்கை என்று கூட நான் சொல்வேன். அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இந்தப் புத்தகத்தை நிச்சயமாக மற்றவர்களும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்''.
இவ்வாறு சைஃப் அலிகான் கூறியுள்ளார்.
அடுத்ததாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘பன்ட்டி ஆர் பப்ளி- 2’, பவன் கிரிபலானி இயக்கத்தில் உருவாகும் ‘பூத் போலீஸ்’ ஆகிய படங்களில் நடிக்கிறார் சைஃப் அலிகான்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago