'ஆக்வாமேன் 2' சமகால விஷயங்களைப் பேசும்: இயக்குநர் ஜேம்ஸ் வான்

By ஐஏஎன்எஸ்

'ஆக்வாமேன் 2' திரைப்படம் இன்னும் தீவிரமாகவும், சமகால விஷயங்களைப் பேசும் படமாகவும் இருக்கும் என இயக்குநர் ஜேம்ஸ் வான் கூறியுள்ளார்.

டிசி காமிக்ஸின் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்புகள், முன்னோட்டங்கள் இணையம் வழியாக நடந்த டிசி ஃபேன்டோம் என்ற பொது நிகழ்ச்சியில் சனிக்கிழமை அன்று ரசிகர்களுடன் பகிரப்பட்டன. இதில் 2022-ம் ஆண்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள 'ஆக்வாமேன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ஜேம்ஸ் வான் பேசினார்.

"எங்கள் நாயகர்களின் பயணத்தைத் தொடர்வதை நான் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். இரண்டாம் பாகத்தோடு இந்த உலகத்தை விரிவுபடுத்துவதையும். இரண்டாம் பாகம் இன்னும் கூடத் தீவிரமாக, நாம் வாழும் இந்த உலகின் சமகால விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும். அப்படித்தான் நான் எடுக்க விரும்புகிறேன்” என்று ஜேம்ஸ் வான் கூறியுள்ளார்.

2018-ம் ஆண்டு வெளியான 'ஆக்வாமேன்' திரைப்படம், டிசி காமிக்ஸ் உலகை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. நாயகன் ஜேஸன் மோமோவுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. சூப்பர் ஹீரோ படமாக இருந்ததோடு, கடலில் மனிதர்கள் செய்யும் மாசு பற்றியும் இந்தப் படம் பேசியது.

'ஸா', 'இன்ஸிடியஸ்', 'கான்ஜூரிங்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் வான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இரண்டாம் பாகத்தையும் ஜேம்ஸ் வான் இயக்குகிறார். கடல் உலகில் இன்னும் பார்க்கப்படாத பல விஷயங்களை, புதிய உலகைக் காட்டுவேன் என ஜேம்ஸ் வான் கூறியுள்ளார். டிசம்பர் 2022-ம் ஆண்டு ஆக்வாமேன் 2 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்