தமிழில் ரீமேக் ஆகிறது ஜோஹார்

By செய்திப்பிரிவு

தெலுங்கில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜோஹார்' திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

தெலுங்கில் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று கீதா ஆர்ட்ஸ். இந்நிறுவனத்தை அல்லு அரவிந்த் நடத்தி வருகிறார். தற்போது 'ஆஹா' என்ற பெயரில் தெலுங்கு மொழிப் படங்களுக்கு மட்டும் தனியாக ஓடிடி தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் தயாராகி வெளியாகாமல் இருக்கும் சிறுபடங்களை எல்லாம் வாங்கி, 'ஆஹா' ஓடிடியில் வெளியிட்டு வருகிறார் அல்லு அரவிந்த். இதில் சுதந்திர தினத்தன்று வெளியான படம் 'ஜோஹார்'. இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர்கள் என அனைத்துக்குமே இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், 'ஜோஹார்' படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்கள். தெலுங்குப் படத்தை இயக்கிய தேஜா மார்னி, தமிழிலும் இயக்கவுள்ளார். அங்கித் கோய்யா, நைனா கங்கூலி, எஸ்தர் அனில் உள்ளிட்ட பலர் தெலுங்கில் நடித்திருந்தனர்.

தமிழில் யார் தயாரிப்பாளர், யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் அனைத்தும் முடிவாகி, முறையாக அறிவிக்கப்படவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்