மருத்துவ ரீதியாக செயற்கை சுவாசம், எக்மோ என அவர் உயிர் காக்கும் கருவிகளிடன் உதவியுடன்தான் அப்பா இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் நிலையாக உள்ளார். இந்த நிலைத்தன்மை அவர் விரைவில் இதிலிருந்து மீள உதவும் என்று நம்புகிறோம் என்று எஸ்பிபியின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. எஸ்.பி.பி.யின் மகன் சரணும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை எஸ்பிபி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது. இதுகுறித்து எஸ்.பி.பி. சரண் விளக்கமளித்துள்ளார்.
» நான்கு பாகங்களாக வெளியாகும் ‘ஜஸ்டிஸ் லீக்: ஸ்னைடர் கட்’
» இது ஒரு மர்மம் நிறைந்த துப்பறியும் கதை: ‘தி பேட்மேன்’ குறித்து மேட் ரீவ்ஸ் பகிர்வு
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
''வழக்கமாக மருத்துவர்களுடன் பேசிவிட்டுதான் அப்பாவின் உடல்நிலை பற்றி உங்களிடம் கூறுவேன். ஆனால், இன்று காலை வேறு வழியின்று ஒரு பதிவு போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்பாவின் உடல்நிலை பற்றி என்னிடம் மட்டும்தான் மருத்துவமனையிலிருந்து தகவல் சொல்லப்படும். அதைத்தான் நான் பிறகு ஊடகங்களிடம் தெரிவிப்பேன்.
துரதிர்ஷ்டவசமாக இன்று காலை முதல் அப்பாவுக்கு கரோனா தொற்று இல்லை என்ற வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கு கரோனா தொற்று இருக்கிறதோ, இல்லையோ, அவரது உடல்நிலை அப்படியேதான் இருக்கிறது.
மருத்துவ ரீதியாக செயற்கை சுவாசம், எக்மோ என அவர் உயிர் காக்கும் கருவிகளிடன் உதவியுடன்தான் இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் நிலையாக உள்ளார். இந்த நிலைத்தன்மை அவர் விரைவில் இதிலிருந்து மீள உதவும் என்று நம்புகிறோம்.
தயவுசெய்து புரளிகளைப் பரப்பாதீர்கள். மருத்துவர்களுடன் பேசிவிட்டு இன்று மாலை நான் பதிவிடுவேன். நன்றி''.
இவ்வாறு எஸ்.பி.பி. சரண் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago