காலப் பயணம், பல்வேறு அண்டங்கள்: 'தி ஃப்ளாஷ்' திரைப்படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By ஐஏஎன்எஸ்

தனது அடுத்த சூப்பர்ஹீரோ திரைப்படமான 'தி ஃப்ளாஷ்' படத்தின் முன்னோட்டத்தைப் பகிர்ந்துள்ள படத்தின் நாயகன் எஸ்ரா மில்லர், இந்தப் படம் மல்டிவெர்ஸ் (பல அண்டங்கள்) என்ற கருவை வைத்து உருவாகியுள்ளதாகவும், இதனால் ஒரே கதைக்குள் பல்வேறு சூப்பர்ஹீரோக்கள் சந்திப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

டிசி காமிக்ஸின் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்புகள், முன்னோட்டங்கள் இணையம் வழியாக நடந்த 'டிசி ஃபேன்டம்' என்ற பொது நிகழ்ச்சியில் சனிக்கிழமை அன்று ரசிகர்களுடன் பகிரப்பட்டன. இதில் 2022-ம் ஆண்டு வெளியாகவுள்ள 'தி ஃப்ளாஷ்' படத்தைப் பற்றிய அறிமுகமும் நடந்தது.

முன்னதாக இந்தப் படத்தில், மைக்கல் கீட்டன் மற்றும் பென் ஆஃப்ளெக் என இரண்டு நடிகர்களும் பேட்மேன் கதாபாத்திரத்தில் தோன்றுவார்கள் என்று செய்திகள் வந்தன. இரண்டு பேருமே இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பேட்மேனாக நடித்தவர்கள். மல்டிவெர்ஸ் அடிப்படையில் தான் இருவருமே ஒரே நேரத்தில் ஒரே படத்தில் பேட்மேன் கதாபாத்திரங்களாகத் தோன்றவுள்ளதாக இந்நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.

"இந்தப் படம் மிகவும் முக்கியமானது ஏனென்றால் டிசி உலகில் இந்தக் கதாபாத்திரங்கள் அனைவருமே அவர்களுக்கென தனி உலகில் இருப்பவர்கள். ஒரே கதையின் பல்வேறு வடிவங்களும் இங்கு இருக்கின்றன. மல்டிவெர்ஸ் என்ற கதவைத் திறப்பதின் மூலம் இந்த வடிவங்களும், அதன் கதாபாத்திரங்களும் சந்திக்கும். இந்தக் கதாபாத்திரம், இந்தக் கதையில் எவ்வளவு சாத்தியங்கள் உள்ளன என்பது பற்றி நினைக்கும்போது எங்களுக்குப் பிரமிப்பாக இருந்தது" என்று எஸ்ரா மில்லர் கூறியுள்ளார்.

காலப் பயணத்தை வைத்து 'தி ஃப்ளாஷ் படம்' உருவாகியுள்ளது. நாயகன் ஆலன், கடந்த காலத்தில் தான் செய்த தவறுகளால் தனது அம்மாவின் உயிருக்கும், அப்பாவின் எதிர்காலத்துக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்துகளைச் சரி செய்ய மீண்டும் கடந்த காலத்துக்குச் சென்ற அந்தத் தவறுகளைச் சரி செய்ய முயல்கிறான் என்பதே இந்தப் படம்.

படத்தின் இயக்குநர் ஆண்டி முஷெட்டி பேசுகையில், "கடந்த கால நிகழ்வுகளை மாற்றியமைக்கும் சக்தி கொண்டவன் இந்த நாயகன். அப்படி நடக்கும் போது அது வெளி-கால தொடர்ச்சியை அது பாதிக்கும்" என்று படத்தில் வரப்போகும் விஷயங்கள் பற்றி சூசகமாகத் தெரிவித்தார்.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' உலகிலும் ஃப்ளாஷ் கதாபாத்திரத்தைக் கொண்டு செல்லும் யோசனையைப் பற்றி முஷெட்டி விளையாட்டாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 2014 மற்றும் 2018 ஆண்டுகளில் 'தி ஃப்ளாஷ்' திரைப்படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுக் கைவிடப்பட்டது. நடுவில் 2017-ஆம் ஆண்டு ஃப்ளாஷ் கதாபாத்திரம் 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த வருட ஆரம்பத்தில் தி ஃப்ளாஷ் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் தொடங்கும், ஜூன் 3, 2022 ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்