படப்பிடிப்புகள் தொடங்க மத்திய அரசு அனுமதி: 33 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

படப்பிடிப்புகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் பின்பற்ற வேண்டிய 33 வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டதால் 2020-ம் ஆண்டு அனைத்து திரையுலகினருக்குமே கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்குவதால் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த தளர்வுகளில் படப்பிடிப்பு தொடங்குவது குறித்த வழிமுறைகள் எப்போது வரும் என பல்வேறு திரையுலகினர் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

இதனிடையே இன்று (ஆகஸ்ட் 23) படப்பிடிப்பு தளங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:

* அதிக ரிஸ்க் உள்ள ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கை எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களுடன் தொடர்புடைய முன்னிலைப் பணிகளில் இவர்களை ஈடுபடுத்த வேண்டாம்.

* முகக்கவசம் அனைவரும் அணிவது கட்டாயம்.

* அடிக்கடி கைகிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது அவசியம். கைக்கிருமி நாசினியை நுழைவாயிலில் வைத்திருப்பது அவசியம். எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது

* சுவாச இங்கிதங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். (தும்மல், இருமல் உள்ளிட்டவை)

* ஆரோக்கிய சேது ஆப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

* நுழைவாயிலில் தெர்மல் ஸ்க்ரீனிங் முறை வைத்திருக்க வேண்டும், கரோனா நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

* முடிந்த வரையில் 6 அடி தூர சமூக இடைவெளி கடைப்பிடித்தல் அவசியம்.

* வாகன நிறுத்துமிடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் வளாகத்துக்கு வெளியே சமூக இடைவெளி கடைப்பிடித்தல் முக்கியம்.

* வளாகத்தில் ஆட்கள் வரிசையைக் கட்டுப்படுத்த போதிய இடைவெளிக்கான அடையாளமிடப்பட்டிருக்க வேண்டும்.

* கோவிட் 19 தடுப்பு அளவுகோல்கள், வழிமுறைகள் கொண்ட போஸ்டர்கள், ஏவி மீடியா டிஸ்ப்ளேக்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

* சமூக இடைவெளியுடன் கூடிய உட்காருமிட ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.

* ஆன்லைன், ஈ வாலெட், க்யூ ஆர் கோட் போல டிக்கெட்டுகள் வாங்க தனி நபர் தொடர்பில்லா வழிமுறைகள்

* பொதுப்பயன்பாடுகளின் இடங்கள், பணியிடங்களில் அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.

* யாருக்கேனும் கரோனா பாசிட்டிவ் என்று தெரிந்தால், வளாகத்தையே கிருமி நாசினி தெளித்து சுகாதாரம் காக்கப்படுவது கட்டயாம்.

* அனைவரும் தங்கள் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும், காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

* கரோனா சந்தேகம் எழுந்தால் தற்காலிக தனிமைப்படுத்தல் அவசியம்.

* ஷூட்டிங் இடங்கள், ரெக்கார்டிங் ஸ்டூடியோக்கள், எடிட்டிங் அறைகள் உள்ளிட்டவைகளில் 6 அடி சமூக இடைவெளி அவசியம்

* காட்சிகள், தொடர் காட்சி அமைப்புகள், கேமரா இருப்பிடம், பணியாளர் இருக்கும் இடம், இருக்கை, உணவு முறைகள் ஆகியவற்றில் சமூக இடைவெளி காக்க வேண்டும்.

* ஷூட்டிங்கின் போது குறைந்த பணியாளர்கள், நடிகர்கள் இருந்தால் போதும்.

* ஷூட்டிங் செட்களில் வெளி ஆட்கள், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

* வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த உள்ளூர் அதிகாரிகளின் உதவியை நாடுவது அவசியம்.

* ஸ்டூடியோக்களில், பல்வேறு அரங்குகளில் நடக்கும் வெவ்வேறு குழுவுக்கு, வெவ்வேறு நேரங்களில் வேலை ஆரம்பிக்கும், முடிக்கும் நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்

* தங்குமிட வசதிகளிலும் சமூக இடைவெளி அவசியம்.

* படப்பிடிப்பு தளங்களில் பிரத்யேக நுழைவாயில் வெளியேறும் வழி

* செட்கள், மேக் அப் ரூம்ஸ், வேன்கள் ஆகியவற்றை சீரான முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது அவசியம்.

* கையுறைகள், முகக்கவசங்கள், பிபிஇ கிட்கள் போதிய அளவில் இருப்பது அவசியம்.

* கேமரா முன் நடிக்கும் நடிகர்கள் நீங்கலாக மற்றவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

* உடைகள், விக்குகள், மேக் அப் பொருட்களை பகிர்வது குறைந்தபட்சமாக இருந்தால் நலம்.

* மேக் அப் கலைஞர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள் பிபிஇ கிட்களை பயன்படுத்த வேண்டும்.

* ஒரே சாதனத்தை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் போது கையுறைகள் கட்டாயம்

* லேபல் மைக்குகள் தவிர்க்கப்பட வேண்டும். இதை பகிர்தலும் கூடாது.

* உதரவிதானத்துடன் மைக்குகள் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* குறைந்தபட்ச செட்-பிராப்பர்டிகளைப் பயன்படுத்த வேண்டும், அரங்கப் பொருட்களை சானிட்டைஸ் செய்வதும் அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்