சிரஞ்சீவி பிறந்த நாள்: திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

நடிகர் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் இந்தியத் திரையுலகினர் அனைவருக்குமே மிக நெருங்கிய நண்பர். இன்று (ஆகஸ்ட் 22) இவர் தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

1970-களிலிருந்து இப்போது வரை நடித்து வருகிறார். இடையே சில காலம் அரசியல் பிரவேசத்துக்காகத் திரையுலகிலிருந்து விலகியிருந்தார். பின்பு கட்சியைக் கலைத்துவிட்டு, தற்போது மீண்டும் திரையுலகிலேயே கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இவரது மகன் ராம்சரணும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார்.

தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் 'ஆச்சாரியா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. இது அவரது 152-வது படமாகும். இன்று (ஆகஸ்ட் 22) இந்தப் படத்தின் டைட்டில் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மாலை 4 மணியளவில் வெளியாகவுள்ளது.

சிரஞ்சீவின் பிறந்த நாளை முன்னிட்டு மகேஷ் பாபு, ரவிதேஜா, அல்லு அர்ஜுன், ராஷி கண்ணா, இயக்குநர் பாபி, சாய் தரம் தேஜ், தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே தங்களுடைய சமூக வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ரசிகர்களும் பிரத்யேக போஸ்டர்கள் வடிவமைத்து சமூக வலைதளத்தில் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்கள். பலரும் வாழ்த்துத் தெரிவிப்பதால் #HBDMegastarChiranjeevi, #HBDChiranjeevi மற்றும் #HBDMegastar ஆகிய ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்