கவலைக்கிடமான நிலையிலேயே தொடர்கிறார் எஸ்.பி.பி என்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 21) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கோவிட்-19 தொற்றுப் பிரச்சினை காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது.
» ட்விட்டரில் இணைந்த கங்கணா: சமூக ஊடகத்தின் சக்தியை உணர்ந்ததாக விளக்கம்
» அப்பாவின் புற்றுநோய் சிகிச்சைக்கு முதன்முதலில் உதவியர் சஞ்சய் தத் - இர்ஃபான் கானின் மகன் உருக்கம்
அவரது உடல்நிலையை எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அவர் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினருக்கும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது."
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago