தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்குவதற்காக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
'ஜகமே தந்திரம்’, 'கர்ணன்' மற்றும் 'அத்ரங்கி ரே' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இந்தப் படங்களை முடித்துவிட்டு இயக்குநர் கார்த்திக் நரேன், ராம்குமார் ஆகியோர் இயக்கவுள்ள படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்தப் படங்களுக்கு பிறகு 'கோமாளி' இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 'கோமாளி' படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ள படம் குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.
தற்போது பிரதீப் ரங்கநாதனிடம் தனுஷ் பேசியிருப்பதாகவும், அவருக்குப் பொருந்தும் வகையில் கதை ஒன்றை எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கதையை முழுமையாக முடித்து அது தனுஷுக்கு பிடிக்குமாயின் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
» சபரிமலைக் கோயிலில் பாடகர் எஸ்பிபி குணமடைய சிறப்புப் பிரார்த்தனை
» என்னால்தான் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று பரவியதா? - போலிச் செய்தி குறித்து பாடகி மாளவிகா விளக்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago