'பொம்மை' இசைக் கோர்ப்பு பணிகள் நிறைவு

By செய்திப்பிரிவு

'பொம்மை' படத்தின் இசைக் கோர்ப்பு பணிகளை யுவன் முடித்துவிட்டதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

'மான்ஸ்டர்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள படம் 'பொம்மை'. ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

'பொம்மை' எனத் தலைப்பிடப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. எடிட்டராக ஆண்டனி, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு எடிட்டர் ஆண்டனி, இந்தப் படத்தின் காட்சியமைப்புகளைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

தற்போது எடிட்டிங் பணிகள் முடிவடைந்து, அதற்கு பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளும் முடிவடைந்துவிட்டது. இதனை எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பின்னணி இசையின் ராஜா, இளம் மேஸ்ட்ரோ, யுவன் சங்கர் ராஜா, 'பொம்மை' படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்பை முடித்துவிட்டார். நானும் பிரியா பவானி சங்கரும் நடித்திருக்கும் இந்த காதல் த்ரில்லர் திரைப்படத்தில், இயக்குநர் ராதா மோகனின் அற்புதமான காட்சிகளுக்கு யுவனின் இசை இன்னும் உயர்ந்த மதிப்பைச் சேர்த்துள்ளன. இறுதி மிக்ஸ் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் உங்களைப் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரோடு சந்திக்கிறோம்"

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்