உலகின் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட 2வது வீடியோ - ஜஸ்டின் பீபரின் பேபி பாடலை பின்னுக்குத் தள்ளிய ‘சடக் 2’ ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

ஜஸ்டின் பீபரின் பேபி பாடலை பின்னுக்குத் தள்ளி உலகின் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட 2வது வீடியோ என்ற பேரை ‘சடக் 2’ பெற்றுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் குறித்த கருத்துகள் கடுமையாக எதிரொலித்து வருகின்றன. தொடர்ச்சியாக கரண் ஜோஹர், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் வாரிசுகளைக் குறிவைத்து, தாக்கிப் பேசி வருகிறார்கள்.

இதனிடையே, மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் ஆலியா பட், பூஜா பட் நடித்திருக்கும் 'சடக் 2' படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இந்தப் படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 12 'சடக் 2' படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில், 'சடக் 2' ட்ரெய்லருக்கு டிஸ்லைக்குகள் 5 மில்லியனைத் தாண்டியது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

வெளியாகி 5வது நாளிலேயே 11 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்று உலகின் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட 3வது வீடியோ என்ற பேரை ‘சடக் 2’ பெற்றது. ஜஸ்டின் பீபர் பாடிய ‘பேபி’ பாடல் 11.63 டிஸ்லைக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது.

இந்நிலையில் தற்போது ஜஸ்டின் பீபரின் பேபி பாடலை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது ‘சடக் 2’ ட்ரெய்லர். இதற்கு இதுவரை கிடைத்த டிஸ்லைக்குகள் 11.65 மில்லியனை தாண்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

2018ஆம் ஆண்டு யூடியுப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்று 18.2 டிஸ்லைக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்