சிரிச்ச முகத்தோட திரும்ப வந்து எங்களுக்காக பாடனும் எஸ்.பி.பி சார் என்று சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"எஸ்.பி.பி சார், விவரம் தெரிஞ்சு, உங்க குரல் கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்ல. விடியக்கால நடந்தாலும் சரி, வீட்ல விசேஷம்னாலும் சரி, தாலாட்டி எங்கள தூங்க வைக்கிறதும் சரி, தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி, எப்பவுமே உங்க பாட்டுத்தான்.
» சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ நடத்தும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» த்ரிஷாவின் இன்ஸ்டா பக்கத்திலிருந்த அனைத்து பதிவுகளும் நீக்கம் - பின்னணி என்ன?
எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடனும், உங்க குல கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்கை ஓடணும்னு. ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன் சார்"
இவ்வாறு சூரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago