கடந்த ஆகஸ்ட் 11 அன்று மாலை திடீரென்று மருத்துவக் காரணங்களுக்காகத் திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சஞ்சய் தத் அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் சஞ்சய் தத்துக்கு 3-ம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்றும், இதன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்னர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் ஏற்பட்டதை அவரது மனைவி மான்யதா தத் உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் சஞ்சய் தத் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் சிகிச்சை தொடங்கியுள்ளது. இதற்காக நேற்று மாலை தனது வீட்டில் இருந்து சஞ்சய் தத் கோகிலா பென் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார். அப்போது அவரை வழியனுப்பி வைக்க அவரது வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
தனது காரில் ஏறும் முன் சஞ்சய் தத் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் அவர்களை நோக்கி ‘எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கூறினார்.
சம்ஷேரா, பூஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா, கே.ஜி.எஃப் 2, பிரித்விராஜ், டோர்பாஸ் ஆகிய படங்களில் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இப்படங்களில் சஞ்சய் தத் குறித்த காட்சிகள் அவரது சிகிச்சைக்கு பின்னர் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago