இயக்குநர் ராம்குமார் ட்வீட்டால், 'ராட்சசன்' படத்தின் ரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.
இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தனது படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதன் தெலுங்கு ரீமேக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தற்போது ஐ.எம்.டி.பி இணையத்தில் தமிழ் படங்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற படம் என்ற சாதனையை 'ராட்சசன்' நிகழ்த்தியுள்ளது. இதற்காக திரையுலக பிரபலங்கள், சமூக வலைதள பயனர்கள் என பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக் கூறினார்கள்.
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: துணைத் தலைவர் போட்டியிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் விலகல்
» இன்னும் செயற்கை சுவாச உதவியுடன் தான் இருக்கிறார்: எஸ்.பி.பி குறித்து எஸ்.பி.சரண்
அப்போது, "இந்த வரவேற்பின் மூலம் 'ராட்சசன்' படம் தொடர வேண்டும் என்பதைக் காட்டுகிறது" என்று விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமாரைக் குறிப்பிட்டுப் பாராட்டுத் தெரிவித்தார். அதற்கு விஷ்னு விஷால் "கண்டிப்பாக. இயக்குநர் ராம்குமார் 'ராட்சசன் 2' கதை தயாரா" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் ராம்குமார் "போயிட்டு இருக்கு" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் 'ராட்சசன் 2' படம் உருவாக இருப்பது தெளிவாகிறது. இந்தப் பதில் 'ராட்சசன்’ படத்தின் ரசிகர்களையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago