ஐ.எம்.டி.பி இணையத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற தமிழ்ப் படம் என்ற சாதனை நிகழ்த்தியுள்ளது 'ராட்சசன்'
தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.
இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தனது படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதன் தெலுங்கு ரீமேக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, 'ராட்சசன்' சத்தமின்றி இன்னொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஐ.எம்.டி.பி இணையத்தில் தமிழ்ப் படங்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது. 'ராட்சசன்' படத்துக்குப் பிறகு 'விக்ரம் வேதா', 'நாயகன்', 'அன்பே சிவம்', 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
» இயக்குநர் ஷங்கர் பிறந்த நாள்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து
» தனித்துவ நடிப்பால் ஒளிர்ந்த அம்பிகா - அம்பிகா பிறந்தநாள் ஸ்பெஷல்
அதே போல் இந்தியப் படங்கள் வரிசையில், 'ராட்சசன்' படத்துக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. 'பதேர் பாஞ்சாலி', 'கோல்மால்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'ராட்சசன்' இடம்பெற்றுள்ளது. 'ராட்சசன்' படத்தைத் தொடர்ந்து 'விக்ரம் வேதா', 'நாயகன்' ஆகிய படங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனையால் படக்குழுவினர் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 'ராட்சசன்' படத்தைத் தயாரித்த ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி, விஷ்ணு விஷால், இயக்குநர் ராம்குமார் ஆகியோர் மகிழ்ச்சியுடன் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
It is Indeed a Proud Moment for us. #AxessFilm Factory's #RATSASAN has been ranked as the #1 Tamil film in #IMDB, Further, it has been ranked #3 in all Time Top Indian Movies. A feat to cherish. @Dili_AFF @dir_ramkumar @TheVishnuVishal @GhibranOfficial @Amala_ams @k_pooranesh pic.twitter.com/Ihp46e01hE
— Axess film factory (@AxessFilm) August 16, 2020
#RATSASAN
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) August 16, 2020
KEEPS BREAKING ITS OWN RECORDS...
THANK YOU FOR ALL D LOVE ... https://t.co/GLPuoHK1CI
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
48 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago