திரையுலகில் 61 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதற்காக கமலுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் தற்போது கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிகர், நடனக் கலைஞர், வசனம், பாடல்கள், இயக்குநர் என பல பரிமாணங்களை தொட்டார். தற்போது அரசியலில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
திரையுலகில் 61 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கமலுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியத் திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில் நுட்பங்கள், பல நூறு கதாபாத்திரங்கள், உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள்”
» 'தெளலத்' போஸ்டரில் தனது புகைப்படம்: யோகி பாபு அதிர்ச்சி
» இசையமைப்பாளர் ஜிப்ரான் பிறந்தநாள் ஸ்பெஷல்: இசையின் உன்னதத்தை உணரவைத்த கலைஞர்
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படம் தான் கமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் சென்னையிலேயே படமாக்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
15 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago