65 வயதைக் கடந்த சின்னத்திரை, திரைப்படக் கலைஞர்கள் படப்பிடிப்பு மற்றும் அது தொடர்பான பணிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தனக்கு வேறு வேலை இருந்தால் ரசிகர்கள் சொல்லவேண்டும் என்று நடிகர் அமிதாப் பச்சன் யோசனைக் கேட்டுள்ளார்.
முன்னதாக மகாராஷ்டிர அரசு வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில் சின்னத்திரை, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தொடர்பான படப்பிடிப்பு மற்றும் அதையொட்டிய பணிகளில் 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள் பணியாற்றக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அரசாங்கம் அப்படி ஒரு விதியை கொண்டு வந்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் இந்த விதியை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து தனது வலைப்பூவில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், "பல கவலைகள் எனது மனதைப் பாதித்துள்ளன. 65 வயதுக்கு மேல் இருப்பவர்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது. என்னைப் போன்றவர்களுக்கு, என் வேலைக்கு, என் 78-வது வயதில் மூடுவிழா என்றே நினைக்கிறேன்.
நாங்கள் இருக்கும் திரைப்பட அமைப்பு இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் பிறகு இந்த வயது வரம்பு விதியை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்று நினைக்கிறேன். எனவே இப்போதைக்கு 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வேலை செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் நீதிமன்றம், வழக்குகள் எல்லாம் நீண்ட காலம் செல்லும். எனவே இறுதி முடிவாக என்ன வரும் என்று யோசிக்கிறேன்.
ஒருவேளை நீதிமன்றத்தில் வயது வரம்புக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தால் எனக்கு வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று உத்தேசித்துச் சொல்ல முடியுமா? " என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஆராத்யா பச்சன் என அனைவரும் கோவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு 10 நாட்கள் கழித்து தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்து வீடு திரும்பினர். ஆகஸ்ட் 2-ம் தேதியன்று அமிதாப் பச்சனும் குணமடைந்து வீடு திரும்பினார்.
மகன் அபிஷேக் பச்சன் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பின் ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று சிகிச்சை முடிந்து, தொற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago