திசை தெரியாமல் குழம்பும் திரையுலகம்: சேரன் ட்வீட்

By செய்திப்பிரிவு

எதிர்காலத் திரையுலகப் பயணம் எந்தத் திசை எனக் கணிக்க முடியாமல் குழம்பிக் கிடக்கிறது திரையுலகம் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து இந்தியா முழுக்கவே திரையரங்குகள் மூடப்பட்டன. 130 நாட்களைக் கடந்தும் இப்போது வரை திரையரங்குகள் திறப்பு தொடர்பாக மத்திய அரசு எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை.

இதனிடையே கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று திட்டமிடப்பட்டு தயாரான படங்கள் யாவுமே வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள திரையுலகச் சூழல் தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சிவாஜி, எம்ஜிஆர் என விசில் அடித்துப் படம் பார்த்து ரஜினி, கமல் என கட் அவுட் வைத்து, விஜய் அஜித் என பாலாபிஷேகம் செய்து படம் பார்த்த அந்தத் திரையரங்க பிரம்மாண்டம் 5 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.

நல்ல படங்கள் வெளியாகும்போது கொண்டாடித் தீர்த்த மக்கள் செல்போனில் ஏதோ ஒரு மொழிப்படத்தை வெறித்துப் பார்த்தபடி வியந்து கிடக்கிறார்கள். எதிர்கால திரையுலகப் பயணம் எந்தத் திசை எனக் கணிக்க முடியாமல் குழம்பிக் கிடக்கிறது திரையுலகம்.

இதில் மக்களின் கருத்து என்ன. அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா. திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்?"

இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்