தானும் தன் குடும்பத்தின் நடிகர்கள் அனைவரும் ஒரே படத்தில் நடிப்பதால் மட்டுமே அது சிறந்த படமாகிவிடாது என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர்கள் கமல் ஹாசன் - சரிகா தம்பதியின் மகள் ஸ்ருதி ஹாசன். இவரது சகோதரி அக்ஷராவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்களோடு சேர்த்து சாருஹாசன், சுஹாசினி, அனு ஹாசன் என பல நடிகர்கள் நிறைந்த குடும்பம் ஸ்ருதி ஹாசனுடையது. தன் குடும்பத்தின் நடிகர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதைப் பற்றித் தான் நினைத்துப் பார்க்கவில்லை என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
"நான் ஏன் அப்படி நினைக்கவில்லை என்று கூறுகிறேன். ஏனென்றால் அது மட்டுமே அந்தப் படத்தைச் சிறப்பானதாக்கிவிடாது. ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களும் நடிப்பதால் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியாது. ஒரு படம் அது சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். அதில் பணியாற்றுபவர்களும் நினைக்க வேண்டும். திரைப்படங்களுக்கென தனியாக ஒரு உயிர் உள்ளதாக நான் நினைப்பேன். அது ஒரு அற்புதமான விஷயம்.
அந்தத் திரைப்படத்தின் ஆற்றல், விதி இவை நம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அது யார் மூலமாக வேண்டுமானாலும் நடக்கலாம். அது என் குடும்பத்தின் மூலம்தான் கண்டிப்பாக நடக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
» 'பேட்மேன்' கதாபாத்திரத்துக்காக கிறிஸ்டோஃபர் நோலனிடம் பொய் சொன்ன பேட்டின்ஸன்
» பாலசந்தர் சார் அறிமுகம் செய்தார்; பஞ்சு சார் பெரிய கலைஞன் ஆக்கினார்: ரஜினி புகழாரம்
ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 'யாரா' என்கிற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளம் ஒன்றில் வெளியானது. இதில் வித்யுத் ஜம்வால் கதாநாயகனாக நடித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago