அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேதாளம்' 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சிவா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்டார்.
இதனால் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தெலுங்கிலும் படங்கள் தயாரிக்கும் ஏ.எம்.ரத்னம், இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பல்வேறு முன்னணி நாயகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
'வேதாளம்' ரீமேக்கில் முதலில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவர் நடிக்கவில்லை. தற்போது சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஹர் ரமேஷ் இயக்கவுள்ளதாகவும், அனில் சுக்ரா - ராம்சரண் - ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 22-ம் தேதி சிரஞ்சீவி பிறந்த நாளாகும். அன்றைய தினம் 'லூஃசிபர்' ரீமேக் மற்றும் 'வேதாளம்' ரீமேக் ஆகியவை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago