'நேர்கொண்ட பார்வை' வெளியாகி ஓர் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்'. இதன் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தமிழில் தயாரித்தார் போனி கபூர். எச்.வினோத் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார்.
வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இன்று (ஆகஸ்ட் 8) 'நேர்கொண்ட பார்வை' வெளியாகி ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 'நேர்கொண்ட பார்வை' படம் ஓராண்டு நிறைவுப் பெற்றதை முன்னிட்டு, மீரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் கூறியிருப்பதாவது:
» ஃபகத் பாசில் பிறந்த நாள் ஸ்பெஷல்: பெரிய கண்களின் அபூர்வம்
» முடிவுக்கு வராத தயாரிப்பாளர் சங்க சர்ச்சை: கருத்து வேறுபாடு முற்றுகிறது!
"மீரா வலிமையான மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடிய பெண். எப்போதும் தன் கையில் ஒரு ரப்பர் பேண்டையும் அணிந்திருப்பார், வெப்பம் அதிகமாகும் சமயத்தில் அதைக் கொண்டு தன் தலைமுடியைக் கட்டிக் கொள்வார். அவர் தற்சார்புடையவர். மீராவைப் போல இருங்கள். தோல்விகளை வெற்றிகளாக மாற்றும் ஒரு மெகா ஸ்டார். நாம் பேசத் தயங்கும் விஷயங்களைப் பேசும் ஒரு படத்தின் ஒரு அங்கம். தலயுடன் சேர்ந்து நடித்தது ஒரு கவுரவம்"
இவ்வாறு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago