அப்பாவைத் தொடர்ந்து மகன்: வைரலாகும் துருவ் புகைப்படம்

By செய்திப்பிரிவு

விக்ரம் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, அவரது மகன் துருவ்வின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

'பொன்னியின் செல்வன்' மற்றும் 'கோப்ரா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இதில் 'கோப்ரா' படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். ஏனென்றால் 'பொன்னியின் செல்வன்' படம் 2-பாகம், பெரிய பட்ஜெட், நிறைய நாட்கள் படப்பிடிப்பு என்பதுதான் காரணம்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை லலித் தயாரிக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனது இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் பணிகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, விக்ரம் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இதனிடையே, நேற்றிரவு (ஆகஸ்ட் 7) விக்ரம் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றி எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. பலரும் பகிரவே #ChiyaanVikram என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டானது. இந்த மாற்றம் 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக இருக்கும் எனத் தகவல் வெளியானது.

ஆனால், இந்த மாற்றம் கார்த்திக் சுப்புராஜ் படத்துக்காக என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால், விக்ரம் போலவே அவருடைய மகனும் உடலமைப்பை முழுமையாக மாற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விக்ரம் - துருவ் விக்ரம் இருவருமே இணைந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவுள்ளதால், அந்தக் கதைக்காக தங்கள் உடலமைப்பை மாற்றியுள்ளனர்.

விக்ரம் படத்தைத் தொடர்ந்து தற்போது துருவ் விக்ரம் படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

மேலும்