விக்ரமின் சிக்ஸ்பேக்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

By செய்திப்பிரிவு

சிக்ஸ்பேக்குடன் விக்ரம் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'பொன்னியின் செல்வன்' மற்றும் 'கோப்ரா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இதில் 'கோப்ரா' இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது. இன்னும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் சுமார் 60% படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது.

'கோப்ரா' படத்தில் பல்வேறு கெட்டப்களில் நடித்துள்ளார் விக்ரம். அந்தப் படத்தின் போஸ்டரில் இருந்த கெட்டப்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தக் கரோனா அச்சுறுத்தல் காலத்தில் விக்ரம் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை.

சமீபத்தில் விக்ரமின் மகளுக்குக் குழந்தை பிறந்துள்ளது. பலரும் விக்ரமுக்கு வாழ்த்துத் தெரிவித்து வந்தார்கள். இதனிடையே, தற்போது விக்ரம் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏனென்றால், இந்தக் கரோனா ஊரடங்கில் முழுக்க உடலமைப்பை மாற்றிக் கொண்டுள்ளார் விக்ரம். இது 'பொன்னியின் செல்வன்' படத்துக்கான கெட்டப்புக்காக இருக்கும் எனத் தெரிகிறது. விக்ரமின் புகைப்படத்தைப் பலரும் ஷேர் செய்யவே #ChiyaanVikram, #Vikram ஆகிய ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்