விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் 'இராவண கோட்டம்' படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
'மதயானைக் கூட்டம்' படம் வெளியாகி சுமார் 7 ஆண்டுகள் கழித்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் முதற்கட்டப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது.
பின்பு 'வானம் கொட்டட்டும்', 'மாஸ்டர்' என இதர படங்களில் பிஸியானார் சாந்தனு. இதனால் 'இராவண கோட்டம்' படத்தின் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. நேற்று (ஆகஸ்ட் 6) படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது என்றும், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு அறிவித்தது. மேலும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இதனிடையே 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'இராவண கோட்டம்' படம் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்தார்கள். அதன்படி, தற்போது 'இராவண கோட்டம்' படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதோடு, "இதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்" என்று சாந்தனுவையும் வாழ்த்தியுள்ளார்.
» பண மோசடி குறித்து ரியா சக்ரபர்த்தியிடம் அமலாக்கப் பிரிவு தீவிர விசாரணை
» கரோனா கால சினிமா: 3- சூலம்; பாடலாசிரியர் வைரமுத்துவின் முதல் படம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago