'லூதர்' வெப் சீரிஸின் இந்தி ரீமேக்கில்  அஜய் தேவ்கன்?

By செய்திப்பிரிவு

'லூதர்' என்கிற ஆங்கில வெப் சீரிஸின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

2010-ம் ஆண்டு பிபிசி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் 'லூதர்'. ஜனவரி 2019 வரை 5 சீசன்களாக மொத்தம் 20 பகுதிகள் ஒளிபரப்பாயின. இதன் நாயகனாக பிரபல ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா நடித்திருந்தார். தொடருக்கும், நாயகன் எல்பாவுக்கும் இதுவரை பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. விமர்சகர்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் தொடர் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் தயாரிக்கவுள்ள இந்தத் தொடரில் நாயகனாக நடிக்க, பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. கோவிட்-19 தொற்றுப் பிரச்சினை முடிந்த பிறகு அஜய் தேவ்கன் இது குறித்து முடிவெடுப்பார் என்று தெரிகிறது.

ஏற்கனவே அஜய் தேவ்கன் 3 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் வெற்றி பெற்ற 'கைதி' திரைப்படத்தின் ரீமேக், 'மைதான்' மேலும் 'தாங் காட்' ஆகிய படங்களில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார். மேலும் அவரது அடுத்த வெளியீடான 'பூஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா', ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

'லூதர்' வெப் சீரிஸின் ஆங்கில வடிவம் அமேசான் பிரைம் தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்