தமிழில் ராப் இசைக்கான சூழல் வேகமாக வளர்ந்து வருகிறது - ‘ஹிப் ஹாப்’ டோனி செபாஸ்டியன் பேட்டி

By செய்திப்பிரிவு

மும்பை, தாராவியிலிருந்து இயங்கி வருகிறது ‘டோப்டெலிக்ஸ்’ ராப் இசைக் குழு. 2010ஆம் ஆண்டு தமிழ், இந்தி உள்ளிட்ட ஆறு மொழிகளில் ராப் பாடல்களை உருவாக்கி வரும் இவர்கள் காலா படத்திலும் ‘போராடுவோம்’ , ‘தெருவிளக்கு’, ‘நிக்கல் நிக்கல்’ ஆகிய பாடல்களை எழுதி பாடியுள்ளனர்.

கடந்த ஆண்டு இவர்கள் வெளியிட்ட ‘ஆய் ஷபாத் சஹேப் மே நவ்தோ’ என்ற மராத்தி பாடல் இதுவரை 90 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்து ‘விஷமா’ என்ற பாடலை டோப்டெலிக்ஸ் குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த குழுவில் ஒருவரான டோனி செபாஸ்டியன் இந்து தமிழ் ஆன்லைனுக்கு அளித்த பேட்டி:

‘விஷமா’ பாடலை எப்படி உருவாக்கினீர்கள்?

கரோனா பெருந்தொற்றுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே இப்பாடலை நாங்கள் உருவாக்கி விட்டோம். ‘வரும் காலம் முகமூடி மட்டுமே’ என்று நாங்கள் முன்பே கணித்தோம். மனிதன் இயற்கையில் பலவழிகளில் நச்சை கலக்கிறான். அதனால் தான் விஷமா என்ற பெயரை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.

தனிப்பட்ட முறையில் இந்தியாவின் சூழலில் எதை மாற்ற விரும்புகிறீர்கள்?

நான் மட்டும் இந்தியாவில் நிலையை மாற்ற முடியாது ஆனால் நான் இளைஞர்கள் ஒன்றியணைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் மீது என் இசையின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். நாம் நம் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அது இல்லாததே நோய்கள் பரவ காரணம். இந்தியாவில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

நீங்கள் இதற்கு முன்னால் உருவாக்கிய பாடலை பற்றியும் அவை எப்படி உருவானது என்பதை பற்றியும் சொல்லுங்கள்?

‘ஸ்டே ஹோம் ஸ்டே ஸ்டே’ மற்றும் ‘நோட் டவுன்’ ஆகிய பாடல்களை இதற்கு முன்பு உருவாக்கினோம். பல மொழிகளில் உருவான இப்பாடல் தாராவி உள்ளிட்ட இந்தியாவின் மற்ற பகுதிகளில் கரோனா குறித்து விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்டது.
இப்பாடலை உருவாக்குவது ஒரு சவாலாக இருந்தது. ஊரடங்கு காரணமாக இப்பாடல் செல்போனால் எடுக்கப்பட்டது.

சுயாதீன இசை, திரைப்பட இசை எதில் இசையமைப்பது உங்களுக்கு பிடித்துள்ளது?

இரண்டுமே எங்களுக்கு பிடித்தமானவை தான். திரைப்படங்களுக்காக இசையமைக்கும்போது புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பும், அற்புதமான மனிதர்களுடன் பணியாற்றும் சந்தர்ப்பமும் கிடைக்கின்றன. ஆனால் சுயாதீன இசையில் எந்தவொரு எல்லையும், கட்டுப்பாடுகளும் இல்லை. நாங்கள் நினைத்ததை இங்கே எங்களால் பேச முடியும். அது திரைப்பட இசையில் முடியாது.

தமிழில் ஹிப் ஹாப் இசைக்கான சூழல் எப்படி இருக்கிறது? குறிப்பிட்ட கலைஞர்கள் யாரையேனும் பின் தொடர்கிறீர்களா?

தமிழில் ஹிப் ஹாப் இசைக்கான சூழல் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகம் முழுவதிலிருந்து புதிய கலைஞர்கள் வருகிறார்கள். சென்னையிலும் கானாவை தாண்டி ராப் கலாசாரம் உருவாகி வருகிறது. மும்பை தமிழ் ஹிப் ஹாப் கலாசாரத்தை முன்னிறுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. யோகி பி மற்றும் நட்சத்திரா, சைக்கமந்த்ரா, பு ஃபார் லைஃப் இன்னும் மலேசியாவிலிருந்து ஏராளமான கலைஞர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். விரைவில் தமிழ் ஹிப் ஹாப் உலக அளவில் கொண்டாடப்படும்.

சமூக வலைதளங்களில் உதவியால் சுயாதீன கலைஞர்கள் தற்போது பிரபலமடைகிறார்கள், ஆனால் 2010ஆம் ஆண்டு நீங்கள் இதை தொடங்கியபோது சூழல் எப்படி இருந்தது?

ஏராளமான சுயாதீன கலைஞர்களுக்கு சமூக வலைதளங்கள் என்பது முதுகெலும்பாக உள்ளது. 2010ஆம் சவுண்ட்க்ளவுட் தளத்தில் ஆடியோ வடிவில் பாடல்களை பதிவேற்றியும் யூடியூபில் வீடியோவாக பதிவேற்றியும் எங்கள் பயணத்தை தொடங்கினோம். சிடிக்களிலிருந்து செல்போன் செயலிகளுக்கு மாறிய இசை ரசிகர்களிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் இந்தியாவில் திரைப்படங்களுக்கு இசையமைப்பது தான் உச்ச குறிக்கோளாக பார்க்கப்படுகிறதே? இதை பற்றிய உங்கள் கருத்து?

சுயாதீன இசையோடு ஒப்பிடும்போது இந்திய திரைப்பட துறை மிகப்பெரியது. அதற்கு உலகம் முழுக்க பரவலான ரசிகர் கூட்டம் உள்ளது. என் பெற்றோர் கூட நான் திரைப்படங்களுக்கு இசையமைக்கிறேன் என்று சொன்னதும் சம்மதித்து விட்டனர். ஆனால் அதற்கு முன்பு சுயாதீன கலைஞராக இருந்தபோது எங்கள் வீட்டில் கதையே வேறு.

ஹிப் ஹாப் என்பது மேற்கத்திய கலாச்சாரம். இங்குள்ள சூழலை மேற்கத்திய சூழலோடு ஒப்பிடுவது சரியாகுமா?

ஹிப் ஹாப் மேற்கத்திய கலாச்சாராமாக இருந்தாலும் அதற்கு இந்தியாவில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களையும் நம்மையும் ஒப்பிடமுடியாது. மொழி, ஆடை, வாழ்க்கை முறை என்று அவர்களுக்கும் நமக்கு ஏராளமான வேறுபாடுகள் உண்டு.

இசையமைப்பாளர்களோடு பணிபுரியும்போது அவர்களால் ஹிப் ஹாப் இசையை புரிந்துகொள்ள முடிகிறதா?

திரைப்பட இசையமைப்பாளர்களோடு பணிபுரிவது சுவாரஸ்யமான ஒன்று. அவர்களுக்கும் ஹிப் ஹாப் இசை பிடிக்கும். சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து ‘காலா’ படத்துக்காக அருமையான ஹிப் ஹாப் பாடல் ஒன்றை உருவாக்கினோம். அவரோடு பணியாற்றியது அற்புதமான அனுபவம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்