பிறந்த நாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் மாளவிகா மோகனன்.
'பேட்ட' படத்துக்குப் பிறகு, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.
நேற்று (ஆகஸ்ட் 4) அவருக்குப் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவருக்குத் திரையுலகினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் மாளவிகா மோகனன். இதில் மாளவிகாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்:
உங்களை ஒவ்வொரு முறையும் மகிழ்விக்கும் ஒரு விஷயம் என்ன?
எனக்குப் பயணம் செய்வது பிடிக்கும்! புதிய மனிதர்களைப் பார்ப்பது, புதிய இடங்கள், புதிய கலாச்சாரம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது. மார்ச் மாதம் ஜப்பான் செல்வதாகத் திட்டம். ஆனால், ஊரடங்கினால் போக முடியவில்லை. வேலையில்லாத நேரங்களில் இதுதான் எனக்குப் பிடித்த விஷயம்.
இந்தப் படத்தைப் பற்றி ஏதேனும் சொல்லுங்கள். இதை 'மாஸ்டர்' குழுவிடமிருந்து எதிர்பார்த்தீர்களா?
இன்று 'மாஸ்டர்' குழுவினர் ஒரு போஸ்டர் வெளியிடுகிறார்கள் என்பதே எனக்குத் தெரியாது. இது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். எல்லா 'மாஸ்டர்' பட போஸ்டர்களிலும் இதுவே எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
ஒரு நடிகையாக, தினமும் புதிய காட்சிகளில் நடிப்பது ஆர்வமாக உள்ளதா அல்லது ஒரே மாதிரியான அலுவலகப் பணியைப் போல போர் அடிக்கிறதா?
ஒரு நடிகையாக தினமும் படப்பிடிப்புக்குச் செல்வது எனக்குப் பிடித்திருக்கிறது, ஏனென்றால் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக, மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே மாதிரி இல்லை. எப்போதும் புதிய மனிதர்களுடன் பணியாற்றுவதன் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. ஏற்ற இறக்கங்கள் நிச்சயம் உண்டு, ஆனால் நிச்சயமாக இது எப்போதும் அலுப்பதில்லை.
உங்கள் முதல் படமே ரஜினியுடன், இரண்டாவது படம் விஜய்யுடன். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று மக்கள் அழைக்கிறார்களே?
என் முதல் இரண்டு படங்களிலேயே மிகப்பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டவளாக உணர்கிறேன். 'பேட்ட' மற்றும் 'மாஸ்டர்' படங்களில் பணியாற்றியதன் மூலம் மிகச்சிறந்த நினைவுகள் எனக்குக் கிடைத்துள்ளன.
ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி?
நான் அவரது மிகப்பெரிய ரசிகை! ஒவ்வொருமுறை சென்னை வரும்போதும் என்னுடைய நண்பர்கள் மற்றும் சக நடிகர்களிடம் ‘ரஹ்மான் சாரோடு ஒரு போட்டோ எடுக்க வேண்டும்’ என்று சொல்வேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது இன்னும் நிறைவேறவில்லை.
உங்களுக்குப் பிடித்த மேற்கோள்?
உங்கள் வெற்றிகளால் அவர்களைக் கொல்லுங்கள், உங்கள் புன்னைகையால் அவர்களைப் புதையுங்கள் - சொன்னவர் விஜய்.
எந்த கோலிவுட் இயக்குநருடன் ஒருமுறையாவது பணிபுரிய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
வெற்றிமாறன்! நான் அவரது படங்களின் மிகப்பெரிய ரசிகை.
'மாஸ்டர்' அனுபவம்?
நான் நடித்த படங்களிலேயே மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ஜாலியான, இளமையான, திறமையான, கவலைகளற்ற குழு.
'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது விஜய்யிடம் நீங்கள் பார்த்து வியந்த ஒரு குணம்?
மிகவும் எளிமையானவர். அவரை எளிதாக அணுகமுடியும்.
தளபதி உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னாரா?
ஆம், அவர் எப்போதும் மிகவும் இனிமையானவர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago