'பாகுபலி' படத்தைக் கலாய்த்து வெளியாகியுள்ள 'பிஸ்கோத்' படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'டகால்டி' படத்துக்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடித்து 'சர்வர் சுந்தரம்', 'பிஸ்கோத்' மற்றும் 'டிக்கிலோனா' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் 'சர்வர் சுந்தரம்' படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. 'பிஸ்கோத்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.
'பிஸ்கோத்' பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கவே, ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. நேற்று (ஆகஸ்ட் 3) மாலை 4 மணியளவில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று கெட்டப்களில் நடித்துள்ளார் சந்தானம்.
இதில் ஒரு கெட்டப்பில், முழுக்கவே 'பாகுபலி' படத்தைக் கலாய்த்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிலையை இழுக்கும் காட்சி, கட்டப்பாவின் தலை மீது பாகுபலி காலை வைக்கும் காட்சி என அனைத்தையுமே கலாய்த்திருக்கிறார்கள். இதில் கட்டப்பா கெட்டப்பில் 'நான் கடவுள்' ராஜேந்திரன் நடித்துள்ளார்.
» ஹெலன் தமிழ் ரீமேக்கின் தலைப்பு முடிவு?
» எந்தவொரு தகவலுமே இல்லாத 'குஞ்சன் சக்ஸேனா' ட்ரெய்லர்: பின்னணி என்ன?
மேலும், ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாகும்போது மற்றவர்களுடைய கணக்கை வாங்கிப் படம் பார்ப்பது என அனைத்தையும் கலாய்த்துள்ளது படக்குழு. இந்த ட்ரெய்லர் சந்தானத்தின் காமெடியை ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
யூடியூப் தளத்தில் முதலிடத்தில் ட்ரெண்டிங் ஆகிவரும் 'பிஸ்கோத்' படத்தின் ட்ரெய்லர் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago