எந்தவொரு தகவலுமே இல்லாத 'குஞ்சன் சக்ஸேனா' ட்ரெய்லர்: பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'குஞ்சன் சக்ஸேனா' படத்தின் ட்ரெய்லரில் படத்தைப் பற்றிய எந்தவொரு தகவலுமே இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது.

கரண் ஜோஹரின் 'தர்மா புரொடக்‌ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’. இப்படம் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் குஞ்சன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்துக்காக ஜான்வி கபூர் குஞ்சன் சக்ஸேனாவுடன் சில நாட்களைச் செலவழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

'குஞ்சன் சக்ஸேனா' படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 1-ம் தேதி யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. எந்தவொரு தகவலுமே இல்லாமல் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதற்குக் காரணம் கரண் ஜோஹர் மீது இருக்கும் வாரிசு அரசியல் சர்ச்சை தான் காரணம் என்கிறார்கள்.

யூடியூப் தளத்தில் ஒரு ட்ரெய்லர் வெளியானால், அந்த ட்ரெய்லர் குறித்த தகவல்களில் நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவருடைய பெயரும் இருக்கும். 'குஞ்சன் சக்ஸேனா' ட்ரெய்லரில் முதலில் கரண் ஹோரின் பெயர் மட்டும் இல்லாமல், மீதி தகவல்களை வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இறுதியில் அது தனியாகத் தெரியும். யாருடைய தகவலுமே இல்லாமல் வெளியிடலாம் எனத் திட்டமிட்டு வெளியிட்டுள்ளனர்.

மேலும், ஜான்வி கபூர் நாயகியாக அறிமுகமான 'தடக்', 'கோஸ்ட் ஸ்டோரீஸ்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'குஞ்சன் சக்ஸேனா' படத்தையும் கரண் ஜோஹரே தயாரித்திருக்கிறார். அடுத்து நடிக்கவுள்ள 'தோஸ்தானா 2' படத்துக்கும் கரண் ஜோஹர் தான் தயாரிப்பாளர்.

இந்த தகவல்களை எல்லாம் வைத்து மீண்டும் வாரிசு அரசியல் சர்ச்சை குறித்துப் பேசப்படும் என்பதாலேயே, எந்தவொரு தகவலுமே இல்லாமல் வெளியிட்டுள்ளனர். ஏப்ரல் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படத்திலாவது, கரண் ஜோஹர் பெயர் இருக்குமா என்பது தான் தற்போது அனைவருடைய கேள்வியாக இருக்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்