அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘ரக்‌ஷா பந்தன்’ - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

By ஐஏஎன்எஸ்

தான் நடிக்கும் ‘ரக்‌ஷா பந்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் நடிகர் அக்‌ஷய் குமார்.

வட மாநிலங்களில் நேற்று (03.08.20) ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி இப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் தான் நடிக்கும் ‘ரக்‌ஷா பந்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார். இப்படத்தைத் தனது சகோதரிக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்‌ஷய் குமார் கூறியுள்ளதாவது:

''நமது இதயத்தின் ஆழத்தை உடனடியாகத் தொடும் ஒரு கதை எப்போதும் கிடைப்பதில்லை. நான் மிகவும் விரைவாக ஒப்புக்கொண்ட ஒரே படம் இதுதான். இந்த ‘ரக்‌ஷா பந்தன்’ திரைப்படத்தை என் அன்பான சகோதரிக்கும், இந்த உலகின் மிகச்சிறந்த உறவு முறையான அண்ணன்-தங்கை உறவுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

ஆனந்த் எல்.ராய் உடன் இணைந்து இப்படத்தை என் அன்புத் தங்கை அல்காவும் தயாரித்து வழங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என் வாழ்வின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றை எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை''.

இவ்வாறு அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்