‘சாஹோ’ இயக்குநர் சுஜித்துக்கு திருமணம் நடைபெற்றது.
'ரன் ராஜா ரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுஜித். அந்தப் படத்துக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து பிரபாஸ் நாயகனாக நடித்த 'சாஹோ' படத்தை இயக்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றது.
கடந்த ஜூன் 11 அன்று இயக்குநர் சுஜித்துக்கும் பல் மருத்துவரான பரவாலிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. ஊரடங்கு காரணமாக இரண்டு குடும்பத்தினர் மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிறு (02.08.20) அன்று ‘சாஹோ’ இயக்குநர் சுஜித்துக்கு ஹைதரபாத்தில் திருமணம் நடைபெற்றது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுஜித் - பரவாலிகா திருமணத்தில் பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை, பலரும் அவருக்கு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 'லூசிஃபர்' ரீமேக்கை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் சுஜித்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago