ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கவுள்ள டொரண்டோ திரைப்பட விழாவில் 'கைதி' திரையிடப்படவுள்ளது.
கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே டப்பிங் செய்யப்பட்டு வெளியானதால், இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் அஜய் தேவ்கான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்துக்கு பல்வேறு முன்னணி நடிகர்களும் படக்குழுவினரைப் பாராட்டினார்கள். 'கைதி' படத்தின் மிகப்பெரிய வெற்றியால் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தார் லோகேஷ் கனகராஜ்.
இதனிடையே, 'கைதி' படத்துக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் விதமாக டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது. 'கைதி' தேர்வாகி இருப்பது குறித்துப் படக்குழுவினர் அனைவருமே பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
» மீண்டும் 'சித்தி 2' ஒளிபரப்பு தொடக்கத்தில் மாற்றம்: பின்னணி என்ன?
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago