'சந்திரமுகி 2' குறித்து வதந்தி: லாரன்ஸ் விளக்கம்

By செய்திப்பிரிவு

'சந்திரமுகி 2' குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சந்திரமுகி'. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினியின் அனுமதியுடன் 'சந்திரமுகி 2' உருவாகிறது.

பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்குள் இந்தப் படத்தில் ஜோதிகா நடிக்கிறார், சிம்ரன் நடிக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

சில தினங்களுக்கு முன்பு, இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. தொடர்ச்சியாக 'சந்திரமுகி 2' குறித்து செய்திகள் வெளியாகி வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"'சந்திரமுகி 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா அவர்கள் சிம்ரன் அவர்கள், மற்றும் கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும். தற்போது திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனா சூழ்நிலை முடிவு பெற்ற பிறகே தயாரிப்பு நிறுவனம் மூலம் அது பற்றி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்"

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்