உலகை அதிரவைத்த ஒப்பற்ற நடிகன் தனுஷ் என்று பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், கதாசிரியர் என அனைத்துத் துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி இந்தி, ஹாலிவுட் திரையுலகிலும் நடித்துள்ளார்.
இன்று (ஜூலை 28) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் தனுஷ். இதனை முன்னிட்டு அவருடன் நடித்தவர்கள், இயக்கியவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். #HappyBirthdayDhanush, #HBDDhanush ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"திரை மொழியை மெளனமாய் உடல் அசைவில் உலகை அதிரவைத்த ஒப்பற்ற நடிகன் தனுஷ். என் மண்ணின் மைந்தன். உன் அசுர நடிப்பைக் கண்டு இன்னும் வியக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள்".
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago