அமேசான் ஓடிடி தளத்துக்காக கைகோத்துள்ள 5 இயக்குநர்கள்

By செய்திப்பிரிவு

அமேசான் ஓடிடி தளத்துக்காக உருவாகும் ஆந்தாலஜி படத்தை 5 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

கரோனா அச்சுறுத்தல் காலத்தில் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. முன்னணி இயக்குநர்கள் அனைவருமே கரோனா அச்சுறுத்தல் குறைந்து எப்போது படப்பிடிப்புக்குச் செல்வோம் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புத் தொடங்கியவுடன், எந்தப் படத்துக்கு தேதிகள் ஒதுக்குவது என்ற குழப்பத்தில் நடிகர்கள் இருக்கிறார்கள்.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால், அந்த அனுமதி பெற்று ஓடிடி தளங்களுக்கான வெப் சீரிஸ் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பல முன்னணி இயக்குநர்களும் வெப் சீரிஸ் இயக்கத்தில் களமிறங்கி விட்டார்கள்.

தற்போது அமேசான் ஓடிடி தளத்துக்காக புதிதாக ஒரு ஆந்தாலஜி திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. ராஜீவ் மேனன், சுதா கொங்கரா, கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சுஹாசினி ஆகியோர் இயக்கியுள்ளனர். அனைவருமே அவர்களுடைய பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள் என்றும், இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் காதலை மையப்படுத்தி இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த ஆந்தாலஜி வகை திரைப்படத்தின் டைட்டில் பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஐந்து இயக்குநர்களின் படங்களில் எந்த நடிகர்கள் எல்லாம் நடித்துள்ளனர் என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்