மிஹீகா பஜாஜ் தான் எனக்கு சரியான ஜோடி என்று ராணா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஆகஸ்ட் 26) தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிதினுக்கு திருமணம் முடிந்தது. அவரைத் தொடர்ந்து ராணாவுக்கான திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. 'பாகுபலி' திரைப்படத்தின் வில்லனாக நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார். மே 12-ம் தேதி மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் மே 21-ம் தேதி இரண்டு குடும்பங்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆகஸ்ட் 8-ம் தேதி ராணா - மஹீகா பஜாஜ் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது.
» அக்டோபரிலிருந்து மதுரையில் 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு
» இணையத் துன்புறுத்தலை நிறுத்துங்கள்: விஜயலட்சுமி விவகாரத்தில் காயத்ரி ரகுராம் சாடல்
தற்போது ராணா அளித்துள்ள பேட்டியில் ஆகஸ்ட் 8-ம் தேதி திருமணத்தை உறுதி செய்துள்ளார். அந்தப் பேட்டியில் திருமணம் குறித்து கூறியிருப்பதாவது:
"சில குறிப்பிட்ட தருணங்கள் நல்லதுக்காகவே நம் வாழ்க்கையில் நிகழும். மிஹீகா என் வாழ்வில் நுழைவது என் வாழ்வின் அது போன்ற மிகச்சிறந்த ஒரு தருணம். அவர் தான் எனக்கு சரியான ஜோடி, நாங்கள் இருவரும் ஒரு சிறந்த இணைகளாக இருப்போம். ஆகஸ்ட் 8 அன்று எனக்குத் திருமணம் ஆக உள்ளது. என் வாழ்வின் மிகச்சிறந்த நாளாக அது இருக்கப்போகிறது"
இவ்வாறு ராணா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago