‘மிஷன் ஜோஷ்’ - சமூக வலைதள கேலிகளுக்கு எதிராக மும்பை போலீஸாருடன் இணைந்து சோனாக்‌ஷி சின்ஹா பிரச்சாரம்

சமூக வலைதளங்களில் செய்யப்படும் கேலி, கிண்டல், வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளுக்கு எதிராக மும்பை போலீஸார் மற்றும் சைபர் நிபுணர்களுடன் இணைந்து மிஷன் ஜோஷ் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் சோனாக்‌ஷி சின்ஹா:

அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஆன்லைன் கேலி மற்றும் வெறுப்புணர்வே நம் சமூக வலைதளங்களை பீடித்திருக்கும் மிகப்பெரிய வைரஸ். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ‘மிஷன் ஜோஷ்’ என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் கேலிகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு ஐஜிபி பிரதாப் திகாவ்கர் உடன் இணைந்துள்ளேன்.

அன்பையும், நேர்மறை விஷயங்களையும் பகிர்வதே சமூகவலைதளங்களின் நோக்கம். ஆனால் துரதிர்ஷ்சவசமாக அவை கேலிகளையும் கிண்டல்களையும் கொண்ட நச்சுத்தன்மை நிறைந்த இடங்களாக மாறிப் போயிருக்கின்றன. நானும் அதில் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு சோனாக்‌ஷி சின்ஹா கூறியுள்ளார்.

இந்த ‘மிஷன் ஜோஷ்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிபுணர்களுடன் 5 நேரலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அவை சோனாக்‌ஷியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE