விஜய் ஆண்டனிக்கு நாயகியாகும் ரித்திகா சிங்

By செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மாதவன் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதற்குப் பிறகு 'ஆண்டவன் கட்டளை', 'ஓ மை கடவுளே' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அருண் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 'பாக்ஸர்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரித்திகா சிங். இந்தப் படத்தினை இன்ஃபினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ஃப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தை 'விடியும் முன்' இயக்குநர் பாலாஜி கே.குமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்து படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன், இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்