கரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போயிருக்கின்றன.
பெரும்பாலான நாடுகளில் கரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் திரையரங்குகள் திறக்கப்படுவதும் தள்ளிக்கொண்டே போகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ‘டெனெட்’, ‘கான்ஜூரிங் 3’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களின் ரிலீஸ் தேதி ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் பல முன்னணி ஹாலிவுட் நிறுவனங்கள் தங்கள் படங்களை மீண்டும் வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவிருந்த ‘எ கொய்ட் ப்ளேஸ்’ அடுத்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பக்கட்டுள்ளது.
அதே போல டாம் க்ரூஸ் நடிப்பில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகவிருந்த ‘டாப் கன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 21 அன்று வெளியாகவிருந்த ‘முலன்’ திரைப்படத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது டிஸ்னி நிறுவனம்.
இது குறித்து டிஸ்னி துணை தலைவர்களான ஆலன் ஹார்ன் மற்றும் ஆலன் பெர்க்மேன் கூறியுள்ளதாவது:
‘முலன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கரோனா வைரஸ் அச்சுறுத்தல்களால் ஒத்திவைக்கப்படுகிறது. இப்படத்தை வெளியிடுவதற்கு ஏற்ற சூழலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனால் இப்படத்தின் மீதான் எங்கள் நம்பிக்கை குறைந்தவிடப் போவதில்லை’
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago