என் உழைப்புக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார் - கங்கணாவை சாடும் டாப்ஸி

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கங்கணா ரணாவத் அளித்த பேட்டியில் மகேஷ் பட், கரண் ஜோஹர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் மீது குற்றம் சாட்டினார். மேலும், டாப்ஸி மற்றும் ஸ்வாரா பாஸ்கர் ஆகியோரையும் சாடினார். இதற்கு டாப்ஸி உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பதிவுகளில் கங்கணாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார்

இந்நிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் கங்கணாவின் குற்றச்சாட்டுகளுக்கு டாப்ஸி பதிலளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வாரிசு அரசியல் சர்ச்சையை ஆரம்பத்திலிருந்து கவனித்தவர்களுக்கு தெரியும். கங்கணா பிறரை குற்றம்சாட்டுவது இது முதன்முறையல்ல. பாலிவுட்டிற்கு வெளியில் இருந்து வந்த ஒரு நடிகையாக நான் பெருமை கொள்கிறேன். ஏனெனில் வெற்றியோ தோல்வியோ அது என்னுடனே முடிந்துவிடும்.

கடந்த ஒரு வருடமாக கங்கணா எனது பெயரை தன்னுடைய விமர்சனங்களில் பயன்படுத்தி வருகிறார். என்னை ‘பி கிரேட்’ நடிகை என்று கூறிவருகிறார். ஆனால் என்னை உண்மையில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் என்னவென்றால், அவர் கூறும் அனைத்து விஷயங்களையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் என்னுடைய உழைப்புக்கு அவர் அவப்பெயரை ஏற்படுத்த முயல்வதுதான்.

இவ்வாறு டாப்ஸி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்