'மக்கள் செல்வி' எனப் போடச் சொல்லி இயக்குநர்களை வற்புறுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு வரலட்சுமி பதில் அளித்துள்ளார்
பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் 'டேனி'. திரையரங்குகள் திறக்கப்படாத சூழலில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் வரலட்சுமி சரத்குமாருடன் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஒரு நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த வரலட்சுமி சரத்குமார் ஜூம் செயலி வழியே பேட்டியளித்தார். அதில் "மக்கள் செல்வி என்று போடச் சொல்லி வற்புறுத்துகிறீர்களாமே" என்ற கேள்விக்கு வரலட்சுமி சரத்குமார் பதில் கூறியதாவது:
"மக்கள் செல்வி என்று கீர்த்தி சுரேஷை அழைத்து வருவதாகச் சொன்னார்கள். இது தொடர்பாக விசாரித்தபோது, மக்கள் செல்வி என்ற பட்டத்தை யாருமே யாருக்கும் கொடுக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன்.
என்னைப் பொறுத்தவரை எனது சினிமா வாழ்க்கையைத் தவிர, பல பேருக்கு உதவி மற்றும் சேவை செய்து வருவதால் 'மக்கள் செல்வி' என்ற பட்டத்தை எனக்குப் பல்வேறு அமைப்பினர் இணைந்து கொடுத்தார்கள்".
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago