நடிகர் ராணா - மிஹீகா பஜாஜ் திருமணம் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் பிரபலத் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். இவரது தாத்தா ராமாநாயுடுவும் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். 'பாகுபலி' திரைப்படத்தின் வில்லனாக நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் 'காடன்' படத்தில் நடித்துள்ளார்.
மே 12-ம் தேதி மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் மே 21-ம் தேதி இரண்டு குடும்பங்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மஹீகா பஜாஜ் இன்டீரியர் டிஸைனராக உள்ளார். நிகழ்ச்சி மேலாண்மை (event management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது நிறுவனம் மூலம் செய்து வருகிறார்.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது ஆகஸ்ட் 8-ம் தேதி ராணா - மிஹீகா பஜாஜ் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
» சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது எப்படி?- மனம் திறந்த விஷ்ணு விஷால்
» விஜய் ஆண்டனி பிறந்த நாள் ஸ்பெஷல்: வெற்றிக்கொடி நாட்டிய இசை நாயகன்
இதனிடையே, ஹைதராபாத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராணா வீட்டிலேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறவுள்ள திருமணம் எங்கு என்பதில் மட்டும் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
கரோனா அச்சுறுத்தலால் ராணா - மிஹீகா பஜாஜ் திருமணம் வெகு விமரிசையாக அல்லாமல், இரண்டு குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் மட்டுமே அழைக்க முடிவெடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சினிமா
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago