விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு 'பிச்சைக்காரன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமனுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர்.
இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு முன்னணி நாயகன் அந்தஸ்து கிடைத்தது. இந்த கரோனா ஊரடங்கில் 'பிச்சைக்காரன் 2' படத்துக்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதி முடித்துள்ளார்.
இதனை கடந்தாண்டு 'பாரம்' படத்துக்காக தேசிய விருது வென்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இன்று (ஜூலை 24) விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு 'பிச்சைக்காரன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளது. இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். விரைவில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கவுள்ளவர்கள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago